
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சுவாமி தரிசனம் செய்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசியது “எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து அமுமுக போட்டியிடும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வைக்கவில்லை”. என தெரிவித்துள்ளார்.
எனவே கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் அணியினர் தேனியில் நடத்தும் போராட்டத்தில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து பங்கேற்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தேர்தலையும் இருவரும் ஒன்றிணைந்து சந்திக்க இருப்பதாக இருந்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சட்டம் போராட்டம் நடத்திவரும் நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைத்து தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுப்போம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.