நாங்க சமாதானம் ஆகிட்டோம்..!! தனுஷின் வாழ்க்கை முடித்து வைத்த நீதிபதி..!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நட்சத்திரமாய் விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இருந்து வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்ய மிரட்டியதாக அவர் மீது தொடங்கப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அஜய் குமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரின் வீட்டுக்கு வந்த சிலர் இந்த வீட்டை நடிகர் தனுஷ் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் எனவே உடனடியாக வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் நடிகர் தனுசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில் 2024 ஜனவரி மாதம் வரை வாடகை ஒப்பந்தம் அமலில் உள்ளது எனவும், அதற்கு முன்பாகவே என்னை காலி செய்து கொள்ளும்படி வற்புறுத்தியது சட்ட விரோதமானது என்றும், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவற்றை துண்டித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாடகை செலுத்தி வருகிறேன். இந்த விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்கள் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார், இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் தனுஷ் சார்பாகவும் கடந்த மே மாதம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது என .தெரிவித்துள்ளார் இதனை ஏற்றுக்கொண்டு நீதிபதி நடிகர் தனுசுக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Read Previous

பக்ரீத் பண்டிகைக்கு ஆடு மாடுகளை பலி கொடுக்க தடை..!! சென்னை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

Read Next

தலை தனியாக துண்டிக்கப்படும்..!! தமிழக பாஜக பெரும்புள்ளிக்கு கொலைமிரட்டல்..!! பரபரப்பில் கோவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular