
டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மே 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கவும் விசிக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றம் திறக்கும் நாளை விசிக சார்பில் துக்க நாளாக அனுசரிப்போம்” என தெரிவித்துள்ளார்.