• September 24, 2023

நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்: வீடுகள்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா..!!

சோபக்கிருது வருடத்தின் விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது .

முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் விநாயகராகவும் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திதியில் பிறந்தவர். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் சோபக்கிருது இந்த ஆண்டு புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்று வளர்பிறை சதுர்த்தி திதி என்பதால் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கடந்த 14ஆம் தேதி அமாவாசை என்பதால் அடுத்த 15 நாட்கள் வளர்பிறை நாட்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்தும் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாங்கப்படி இன்று காலை 11. 38 பின்பு சதுர்த்தி வருவதாலும் நண்பகல் 12.00 மணிக்கு எமகண்டம்  முடிவடைவதாலும் அதன் பின் விநாயகருக்கு வீடுகளில் பூஜை செய்யலாம்.

Read Previous

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை அள்ளிய தமிழ் இயக்குனர்..!!

Read Next

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவரா நீங்கள்..?!!:அப்ப உடனே இதை செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular