அசைவத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை அப்படி இருக்க நாட்டு கோழி என்றாலே தனி சுவையும் ருசியும் உண்டு, அப்படி இருக்கும்போது நாட்டுக்கோழி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
உடல் சக்தி இல்லாத வாலிபர்கள் பூப்பெய்தாத பெண்கள் புது மண தம்பதிகள் நீடித்த நோய்வாய் பட்டவர்கள் என பலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது கோழிக்கறி, அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்து விட்டாலே கோழி அடித்து அறுசுவை உணவுடன் ஆரோக்கியத்தை கொடுத்து அனுப்பிய மரபு தமிழர்களிடையே உண்டு, மேலும் சளி இரும்பல் என சற்று தந்தாலே மிளகு சேர்த்து நாட்டுக்கோழி ரசம் வைத்து கொடுத்து நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அந்தகாலத்தில் பலர் இருந்தனர், தசைகளுக்கு தெம்பை கொடுக்கும் நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக்கோழி இனங்கள் உதவுகின்றன அதிலும் குறிப்பாக சுவாச நோய்களுக்கும் நாட்டுக்கோழி சிறந்த மருந்தாகும், வாரத்திற்கு ஒரு முறை நாட்டுக்கோழி அடித்து ரசம் வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பறந்து ஓடும்..!!




