தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை மாதம் 8, 9, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு புகழேந்தி என்பவர் வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6 தேதி உடல் நலப் குறைவின் காரணமாக காலமானார்.
இதனால் காலியான தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் 13ஆம் தேதி அன்று எண்ணபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டாஸ்மார்க் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.