
ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்து பல விதிமுறைகளை விதித்து வருகிறார். இதனால் மற்ற நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல் அவரது நாட்டு மக்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பல சட்ட திட்டங்களை அமல்படுத்தி தான் அவர் வந்திருக்கிறார். அப்படி அவர் அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்தே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தக போர் தொடங்கிவிட்டது. இதனால் பல நாடுகளுக்கு அடி விழும் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
அப்போதிலிருந்தே சீனா இந்தியாவிடம் நட்பு பாராட்ட முயன்று வருகிறது என்றும் நமக்கு நன்றாகவே தெரியும். ஒரு சில நாட்களுக்கு முன்பாக சீனாவில் இருக்கும் ஒரு சில பகுதிகளை விசா இன்றே இந்தியர்கள் சென்று பார்த்து வரலாம் என்று அறிவித்திருந்தது. அந்த வகையில் இப்பொழுது சீனா அந்த நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை இந்திய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விசா நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.
மேலும் கடந்த நான்கு மாத காலத்தில் மட்டுமே 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா. சீனா நம்மிடம் நட்பு பாராட்ட முயன்று வருவதும் இந்த திடீர் மாற்றங்களும் பல பேருக்கு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.