நான் காற்றை சுவாசிக்கவில்லை..!! நம்பிக்கையை சுவாசிக்கிறேன்..!! ஏன் தெரியுமா?..

நான் காற்றை சுவாசிக்கவில்லை. நம்பிக்கையை சுவாசிக்கிறேன். ஏன் தெரியுமா?
எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.
எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும்,
நீ தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .
நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .
உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .
எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .
உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !
எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .
உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !
உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .
உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பட்சத்தில், நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை..

Read Previous

Ashok Leyland நிறுவனத்தில் 331 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.21,900..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

அம்மா என்பவள் யார்?.. இவள் தான் அம்மா..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular