• September 24, 2023

“நான் சாவுறேன், குழந்தைகளை பார்த்துக்க” – லோன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை; வங்கி ஊழியர்களுக்கு தர்ம அடி.!!

சென்னையில் உள்ள காசிமேடு, விநாயகபுரம் பகுதியை சார்ந்தவர் ரகுமான் (வயது 38) எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை செய்து வருகிறார். ரகுமானின் மனைவி சாமுண்டீஸ்வரி, தம்பதிகளுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் ரூ2 லட்சம் கடன் வாங்கிய ரகுமான் மாத தவணையாக ரூ6000 செலுத்தி வருகிறார். சில மாதங்களாக வேலை சரிவர கிடைக்காத காரணத்தால் வங்கி தவணை செலுத்தவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட வங்கியின் ஊழியர்கள் இரண்டு பேர் ரகுமானின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தொந்தரவு செய்து அவரை அசிங்கப்படுத்தினர்.

இதில் மனமடைந்து போன ரகுமான் வேலைக்குச் சென்று அங்கிருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார் அவர் “வங்கி அதிகாரிகள் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் நான் தற்கொலை செய்யப் போகிறேன். நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்”, என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ந்து போன மனைவி சாமுண்டீஸ்வரி விரைந்து கணவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றார் .அப்போது அவரின் உயிர் பிரிந்த நிலையில் ரகுமான் சடலமாய் தொங்கியுள்ளார். இந்த தகவல் அறிந்த ரகுமானின் உறவினர்கள் பெரும் ஆத்திரத்தில் இருந்த நிலையில் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளது வந்து வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

பணம் கிடைக்கப் போகிறது என்று ஆவலாக வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட உறவினர்கள் வங்கி பணியாளர்களை அடித்து நொறுக்கி காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கொடூரத்தின் உச்சம்… மகளின் கர்ப்பத்திற்கு காரணமான காம கொடூர தந்தை… 7 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்த காவல்துறை.!!

Read Next

வீடு வாடகைக்கு வேண்டும் என 2 பெண்கள் வாரங்களோ?; மக்களே உஷார்.. திருட்டு பெண்கள் கைது.. திறந்து வீடு டார்கெட்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular