
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தவர் தான் டொனால்ட் ட்ரம்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ஜோ- பைடன் அமெரிக்கா அதிபராய் பொறுப்பேற்றுக் கொண்டார். இருப்பினும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசி அதை அவர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார்/
இதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இச்சபத்தால் நாட்டின் வன்முறைகளை வன்முறையை தூண்டியதாக டொனால்ட் டிரம்ப் முகநூல் யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் முகநூல் மற்றும் யூ-ட்யூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை டொனால்ட் டிரம்ப் தனது முகநூல் மற்றும் யூ-ட்யூப் பக்கங்களில் “நான் திரும்ப வந்துட்டேன்” என்று பதிவிட்டு அதனுடன் வீடியோ ஒன்றினை இணைத்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.