நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல ராகுல் காந்தி விளக்கம்..!!

நான் வணிக விரோதியாக பாஜகவில் உள்ள சிலரால் சித்தரிக்கப்படுகிறேன், ஆனால் நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார்..

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வணிகம் தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி இருந்தார், அதில் அவர் கிழக்கிந்திய கம்பெனி 150 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போனாலும் அது உருவாக்கிய மூலபயம் ஏகபோகவாதிகளின் வடிவில் மீண்டும் அதன் இடத்தை பிடித்துள்ளது, எனக் கூறியிருந்தார் இது தொடர்பாக அவரை பாஜக கடுமையாக விமர்சித்து இருந்தது, இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியது நான் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் நான் மனித விரோதியாக பாஜகவில் உள்ள சிலரால் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல நான் ஏகபோகத்திற்கு எதிரானவன் தன்னலத்தை உருவாக்குவதற்கு எதிரானவன் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஐந்து நபர்களின் வணிக ஆதிகத்திற்கு எதிரானவன் என கூறியுள்ளார்..!!

Read Previous

சென்னையில் கஞ்சா விற்பனை சூடான் நாட்டை சேர்ந்த இருவர் கைது..!!!

Read Next

தமிழகத்தில் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular