நான் ஸ்டிக் தவா பயன்படுத்தினால் கேன்சர் ஆபத்து., மண்பானை சமையலே சிறந்தது – மருத்துவர் அறிவுரை.!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரளவுக்கு கிராமங்களில் இருந்த மண்பாண்ட சமையல் அனைத்தும் நமது பாட்டிகள் சிவலோக பதவி அடைந்ததும் காணாமல் போயிற்று.

நகரங்களில் அவசரப் பணிகளுக்காக வாழும் பலரும் மண்பாண்ட சமையலை மறந்தே விட்டனர். தற்போதைய காலகட்டத்தில் உள்ள சில்வர் உட்பட பிற பொருட்களில் செய்யப்படும் பாத்திரங்களை வைத்து சமையல் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் எந்நேரமும் எந்த வகை உணவிற்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இது  உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என  சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ஜெபா ஜூலி கூறுகையில்,“ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகளை போல வீட்டில் செய்யும் சாதமும் தற்போது ஆபத்தாக ஆபத்தானதாக மாறி வருகிறது எண்ணெய் காரம் சேர்க்கப்படும் துரித உணவுப் பொருட்கள் உடல்நிலைக்கு ஆபத்தானது. இதனால் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்றவை ஏற்படும். வீட்டில் செய்யப்படும் உணவுகளும் தற்பொழுது துரித உணவுகளை போல கூடுதல் எண்ணெய் உப்பு, ஃப்ளேவர் காரம், சர்க்கரை போன்றவை சேர்த்து சமைக்க தொடங்கிவிட்டனர்.  இதனால் கடையில் சாப்பிடும் உணவுகளை போல பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பெண்கள் பிசிஓடி எனப்படும் மாதவிடாய் பிரச்சனையும் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

ரூ.99 ரூபாயில் உயிரை பறிகொடுத்த புதுஜோடி..!! கதறி துடிக்கும் குடும்பம்.!!

Read Next

தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு பாருங்க..!! உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular