தற்சமயம் நாமக்கல் தாலுகா மருத்துவமனையாது இட வசதி குறைவாக இருக்கும் பட்சத்தில் நாமக்கல் மெடிக்கல் கல்லூரிக்கு அரசு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் தாலுகா மருத்துவமனை அவசர சிகிச்சைக்காக இயங்க வேண்டும் என்று பலரும் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வைத்துள்ளனர், நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களை ஆதரவு திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சித்தனர், இதனை அறிந்த அரசு மருத்துவமனை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமையில் சிறிய கூட்டத்தை அமர்வுபடுத்தி அதில் வாசு பேசியுள்ளார், 24 மணி நேரமும் அரசு மருத்துவமனை செயல்பட வேண்டும் என்றால் போதிய வசதிகள் இங்கு இருக்க வேண்டும் என்று அதற்கு தாமதம் ஆகும் என்றும் கூறியுள்ளார்..!!