வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிருஷ்ணர் வேடமடைந்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் நாமக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை..
வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கிருஷ்ணர் சிலை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது, கிருஷ்ணரின் சிலையானது அரை அடி முதல் 3 அடி நீளம் வரை உள்ளது, மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிருஷ்ணரின் சிலையை வாங்குவதில் மும்முரமாக இருக்கின்றனர் மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்று கிருஷ்ணரின் சிலையை வைத்து அதற்கு அலங்காரம் செய்து கிருஷ்ணர் சாப்பிடக்கூடிய உணவுப் பலகாரங்களை படைத்து வழங்கி வருவது தமிழர்களின் பழக்கம்..!!