நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 10 பைசா சரிவு: ஒன்றுக்கு ரூ.5.10 ஆக நிர்ணயம்..!!

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 22ம் தேதி ரூ. 5.40 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது, இந்த நிலையில் நேற்று மாலை, மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 575, பர்வாலா 470, பெங்களூர் 550, டெல்லி 525, ஹைதராபாத் 500, மும்பை 570, மைசூர் 550, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 530.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 126 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 67 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Read Previous

நள்ளிரவில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!! படுகாயமடைந்த போலீசார்..!!

Read Next

ரொம்ப பெருமையா இருக்கு.. தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி.. காரணம் என்ன.?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular