தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரினால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் இருந்த ஏழு வீடுகள் வெள்ளத்தால் சேதாரம் அடைந்தது.
மேலும் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறி முகாமில் தங்கி இருந்த மக்கள் தங்களது வீட்டிற்கே செல்ல வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார், மேலும் சேதாரம் அடைந்த ஏழு வீடுகளை இன்ஜினியர் மற்றும் வட்டாட்சியர் நகராட்சியர் என பலரும் சோதனை மேற்கொண்ட பிறகு அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவு உபகரணங்கள் முகாமில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினர்..!!