நாமக்கல் அருகே திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் தெப்பக்குளம் அமைந்துள்ளது இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தூர்வாராத காரணத்தினால் திருச்செங்கோடு எம்எல்ஏக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து குளத்தை தூர் செய்த நிலையில் மீன்கள் இறந்திருக்கிறது பெரும் அதிர்ச்சியை தெரிவித்து என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்..
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை அருகே தெப்பக்குளம் அமைந்துள்ளது இது பல ஆண்டு காலமாகவே பராமரிப்பின்றி இந்த தெப்பக்குளம் குப்பை சேர்ந்து காணப்பட்டு வருகிறது, திருச்செங்கோடு எம்எல்ஏ மட்டும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் முயற்சியால் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது இந்த நிலையில் இன்று ஏராளமான மீன்கள் தெப்பக்குளத்தில் செத்து விழுந்து துர்நாற்றம் பேசியது இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் குளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்…!!




