நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே தடுப்புச் சுவர் ஒன்றில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார் மற்றும் மனைவி மகன் என 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே தந்தை தாய் மகன் உறவினர்கள் என 5 பேரும் சின்ன சூரம்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, கரூர் செல்லும் போது பைபாஸ் அருகில் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் கார் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 71 வயதுமிக்க தந்தை பூச்சி நாயுடு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார், தாய் சரசு பரசுராமன் மனைவி நிர்மலா மற்றும் ஜனார்த்தனன் காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த ஏழுமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!