நாமக்கல் அருகே பழைய பாளையம் பகுதியில் ஆண் சடலம் ஏரிக்கையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிற நிலையில் நாமக்கல் மாவட்டம் பழைய பாளையம் ஏரிக்கரை மேற்கு பகுதியில் சாலப்பாளையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலம் கிடைப்பதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த 30 வயது மதிப்பு இளைஞரின் உடலில் மீட்டனர் மேலும் அந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, பழைய பாளையம் மற்றும் சாலப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது மேலும் அந்த பகுதியில் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு இளைஞரின் மரணத்திற்கு காரணம் என்னவென்றும் விசாரித்து வருகின்றனர், அதே பகுதியில் பிரச்சனைகள் அதிகமாகி வருவதனால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்..!!