
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்று தலைமறைவாகி விட்டார் அந்த இளைஞரை கண்டுபிடித்து கைது செய்தனர் திருச்செங்கோடு காவல்துறையினர்.
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பார்த்திபன் (39) தனது இருசக்கர வாகனத்தில் உழவர் சந்தையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சென்றுள்ளார், சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை உடனே அருகில் உள்ள திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அளித்தனர், இதன் பேரில் அங்கு சென்று போலீஸ் அதிகாரியும் விசாரணையில் மேற்கொள்ள போது அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து திருடிய நபரை கண்டறிந்து அவரை விசாரணையில் மேற்கொண்ட போது, விசாரணையில் அவர் ராசிபுரத்தைச் சேர்ந்த தொப்பம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளி மணிகண்டன் என்று தெரியவந்தது மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆதார் செய்து சிறையில் அடைத்தனர்..!!