
மறந்து போன ஒன்று திண்ணை..
அந்த காலத்துல இந்த மாதிரி திண்ணையை கட்டி போட்டு வர்றவங்க போறவங்க நமக்கு தெரிஞ்சவங்க கொஞ்ச உட்கார்ந்து போக வேண்டும் என்று திண்ணை காட்டினார்கள்….
ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் குறைந்தது ஐந்து ஆறு குழந்தைகள் கண்டிப்பாக இருப்பார்கள்… இரவில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட பிறகு இந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள் காற்றோட்டமாக,.
(இப்போது யாரும் ஒன்றாக அமர்ந்து பேசியதை பார்த்ததே இல்லை, இப்போது தனியாக உட்காராத்தான் விருப்பப்படுகிறார்கள்…
அப்போதெல்லாம் டிவி எல்லாம் கிடையாது.. வானொலி பெட்டி மட்டும் தான்..
எங்க வீட்டு பக்கத்துல ஒரு சோழபுரம் செட்டியார் தாத்தா இருந்தாரு அவரு வீட்டுல திண்ணை இருக்கு தினமும் மாலை 6:00 மணிக்கு இந்த மாதிரி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு திருநெல்வேலி வானொலி நிலையத்தில் கிராமிய கலை என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், அதில் ஒரு நாளைக்கு “நையாண்டி மேளம் ஒரு நாளைக்கு “வில்லுப்பாட்டு ஒரு நாளைக்கு கணியன் கூத்து இப்படி வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு கிராமிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த தாத்தா திண்ணையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார் அதை நானும் பார்த்து ரசித்து இருக்கிறேன்…
அந்த காலத்துல முதியோர் இல்லமெல்லாம் கிடையாது
அப்பத்தமார்கள் எல்லாம் வீட்ல எல்லாம் இருப்பாங்க. அவங்களுக்கு நேரம் போகாது இந்த திண்ணையில் உட்கார்ந்து கிட்டு வெத்தலைய இடித்துக் கொண்டு வரவங்க போறவங்க கிட்ட பேசி கொடுத்துட்டு உட்கார வைத்து பேசிக்கொண்டு இருப்பார்கள்…
பள்ளிக்கூடம் லீவு என்றால் போதும் இந்த திண்ணையில் உட்கார்ந்து நண்பருடன் அரட்டை அடிப்பார்கள்…
இப்போதெல்லாம் திண்ணை கட்டுவது இல்லை இப்போது திண்ணை எங்கே இருக்கிறது என்று கேட்டால் முதியோர் இல்லங்களில் தான் இருக்கிறது அதிகமாக….