
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் இவைதான்..!! ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு முறை ஒரு காரணம் என்றாலும் நம்முடைய நேர்மையான எண்ணங்களும் ஒரு காரணம். இந்த வகையில் தினமும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாள் எனக்கு நல்ல நாளாக அமையும் இன்றைய நாளில் நான் நன்றாக செயல்படுவேன் என உங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். தினமும் காலை மதியம் இரவு ஏதாவது ஒரு வேலைகளில் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கிய பலன்கள் ஏராளம். தினமும் 40 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். தினமும் மூன்று முறை மட்டுமே சாப்பிட வேண்டும் அதுவும் அளவாக ஆரோக்கியமான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் வெளியேற்ற வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் குளியல் பண்ண வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்று உறக்கம். இரவில் கண்டிப்பாக எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.