நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கு வரும் என்பதற்கு இந்த பதிவு ஒரு எடுத்துக்காட்டு..!! ஒரு முருங்கைக்காய் வியாபாரியின் கதை!!

தன்வினை தன்னைச் சுடும்

தன் தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய் எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே வழமையாக ஒரு மளிகை கடையில் முருங்கைக்காயை கொடுத்துட்டு அதற்கு பதிலா அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் அந்த விவசாயி !

விவசாயி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் ! இதைப் பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு சேர்ந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து வந்தார் .

பல வருடமா விவசாயி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை . விவசாயி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் ! காரணம் விவசாயியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது !

ஒருநாள் விவசாயி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமா வேண்டும்னு ஒரு சமையல்காரர் வந்து கேட்க , அவருக்காக கடைக்காரர் அதை அப்படியே தர, சமையல்காரர் அவர் முன்னாலேயே எடை போட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது !

அன்று முழுவதும் மாளிகை கடைக்காரருக்கு தூக்கமே வரலை ! விவசாயி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் , இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துட்டாரே, இத்தனை வருடங்களா இப்படி முட்டாள்த்தனமா எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை விவசாயி வந்தால் சும்மா விடக்கூடாதுன்னு கடுங்கோபத்தில் இருந்தார் !

நான்கு நாட்கள் கழித்து விவசாயி மிகவும் சந்தோசமா முருங்கைக்காயோடு வந்தார் ! அவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும்னு எத்தனை கிலோ? ன்னு மாளிகைக்காரர் கேட்க பத்து கிலோ ன்னாரு விவசாயி .

கடைக்காரர் அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது .

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா ? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பித்தானே எடை போடாம அப்படியே வாங்கினேன் . இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் எனத் துப்ப , நிலைகுலைந்து போன விவசாயி , ஐய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்டே காசு இல்ல, ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலையும், இன்னொரு தட்டுல முருங்கைகாயையும் வச்சிதான் எடை போட்டு கொண்டு வருவேன் இதைத் தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா ன்னு கதறினார் .

மாளிகைக்காரருக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு ! ஏன்னா,, தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் ! இத்தனை வருடங்களா விவசாயியை ஏமாற்ற நினைத்த மாளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்னு தெளிவானது !

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் .

அது வருகின்ற காலங்கள் வேண்டுமானா தாமதமாகலாம் ஆனா நிச்சயமா வரும் . !

 

Read Previous

ஒரு முறை இட்லி தோசைக்கு உருளைக்கிழங்கு குருமா இப்படி செஞ்சு பாருங்க..!!

Read Next

கணவன் மனைவி உறவுக்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular