Oplus_131072
நாம் ஏன் குண்டாகிறோம் தீர்வுகளுடன் மருத்துவ விளக்கம்
நவீன உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் அதிகரித்துள்ள நிலையில், “நாம் ஏன் குண்டாகிறோம்?” என்ற கேள்விக்கு தெளிவான மருத்துவ விளக்கத்தையும் தீர்வுகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் ஏனெனில் படிக்கும் காலத்தில் எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம்.
ஏன் நாம் குண்டாகிறோம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ள ஒன்றுதான். நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே.. நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்? நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையுடனும் இன்றைய உணவுப் பழக்கங்களுடனும் உள்ள வித்தியாசங்களை பார்த்தால் மாறுபட்ட தன்மையே காணப்படுகிறது.
உணவுப் பழக்கம் என்பது மிகப்பெரிய காரணம் நம்மில் பலர் படிக்கும் போது சிலிம்… மேரேஜ் அப்புறம் தான் குண்டானேன்!” என்று கூறினாலும், அதற்கான அடிப்படை காரணம் நமது உணவு வடிவமே. திணை, கம்பு, கைக்குத்தல் அரிசி போன்றவை உண்ட முன்னோர்களுக்கு வயிற்றுப்பகுதி கொழுப்பு பிரச்சனை மிக குறைவு. ஆனால் இன்றைய தலைமுறை தினமும் அதிக மாவுச்சத்துள்ள உணவுகளையே (அரிசி, இட்லி, தோசை, சாதம்) அதிகமாக உட்கொள்கிறார்கள்.
மேலும் “ஸ்நேக்ஸ்” என்ற பெயரில் ரீபைன்டு சுகர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை அதிகமாக சாப்பிட்டு பழகிவிட்டனர். முன்னோர்களின் உடல், இன்றைய தலைமுறையின் உடல் இரண்டுமே வேறுபட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்வதற்காக உண்பவர்கள்… நாமோ உண்பதற்காக வாழ்பவர்களாக மாறியுள்ளோம். முன்னோர்கள் உண்ட உணவில் மாவுச்சத்து மிகவும் குறைவு; ஆனால் தற்போது மாவுச்சத்தே முக்கிய இடத்தை பிடித்ததால், உடல் எடை அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகி வருகிறது.
இன்சுலின் – முக்கியமான ஹார்மோனின் பங்கு அதிக கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்ளும் போது, பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க உருவான “இன்சுலின்” ஹார்மோன் அதிகமாக சுரந்து, கொழுப்பை சேமித்து வைக்கிறது. இது பின்னர் ட்ரைகிளிசரைட்ஸ் வடிவில் “தொப்பை” மற்றும் உடல் கொழுப்பாக மாறுகிறது. ரீபைன்டு சுகர் கணையத்தின் பீட்டா செல்களை சேதப்படுத்தி, இன்சுலின் உற்பத்தியையே பாதிக்கிறது. இதுவே “இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்” உருவாகும் முக்கிய காரணம் ஆகும்.
க்ரெலின் – லெப்டின் : பசி மற்றும் நிறைவு ஹார்மோன்கள் மேலும், பசிக்கு காரணமான க்ரெலின் மற்றும் நிறைவைக் கட்டுப்படுத்தும் லெப்டின் ஹார்மோன்களும் குண்டாகும் நிலையை தீவிரப்படுத்துகின்றன. “குண்டானவர்கள் லெப்டின் ரெசிஸ்டென்ஸ் காரணமாக நிறைவு உணர்வை அடையாமல் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள்” குறிப்பாக அதிக கார்ப்ஸ் உண்பவர்கள் அடிக்கடி பசியை அனுபவிப்பதும், அதேசமயம் புரதமும் நல்ல கொழுப்பும் அதிகம் உண்பவர்கள் 20 மணி நேரம் உணவின்றியும் சோர்வு இல்லாமல் இருப்பதும் இதனால் தான்.
இதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போமானால் :
1. நம்முடைய உணவில் மாவுச்சத்தை குறைக்க வேண்டும்.
2. புரதச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும்
3. நல்ல கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும்
4. கொழுப்பை கரைக்க கொழுப்பே உதவும் என்பதால், சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும்
கொழுப்பை கொழுப்பால் தான் கரைக்க முடியும்…




