நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!
குறிப்பாகவே ஒரு சில ஆன்மீக குறிப்புகள் எல்லாம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த நவீன காலகட்டத்திலோ பலரும் அதை அலட்சியமாக நினைத்து சிலர் அதைப் பின்பற்றாமலேயே நகர்கின்றனர். இந்த வகையில், நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்பு பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நம் வீட்டு உறவினர்களையோ அல்லது நம் வீட்டை சார்ந்த நபர்களையோ அல்லது தன்னுடைய மகனோ மகளோ மனைவியோ அல்லது கணவனோ வெளியூருக்கு அனுப்பி விட்டு செய்யக்கூடாத சில விஷயங்கள் இதோ. நம் வீட்டு ஆட்களை வெளியூருக்கு வழி அனுப்பிவிட்டு அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. அவசரமாக குளிக்க செல்லக்கூடாது. மேலும், தலைக்கு கண்டிப்பாக குளிக்க கூடாது. விருந்தினரை வழி அனுப்பி விட்டு வீடு பெருக்கி துடைக்க கூடாது. மற்றும் வீடு மற்றும் வாசல் களைவக்கூடாது குப்பைகளை வெளியே எடுத்துச் சென்று கொட்ட கூடாது. விருந்தினரை வழி அனுப்பிவிட்டு உடனே பூஜை செய்யக்கூடாது. அவர்கள் வீட்டில் இருக்கும்போதே பூஜை செய்து விட வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் சிறிது நேரம் கழித்து பூஜை செய்யலாம்.




