நாளுக்கு நாள் அதிரடியாய் குறையும் தங்கத்தின் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தங்கநகைகள் வாங்குவதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6140க்கும், சவரனுக்கு ரூ.49,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5670க்கும், சவரனுக்கு ரூ.45,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6140க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5660க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ரூ.1 குறைந்து ரூ.76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read Previous

இலவச ரேஷனுக்கு பதிலாக ரூ.490 வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு..!!

Read Next

128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி மேக்ஸ்வெல் சாதனை – ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular