
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். பதவிநீக்கம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜூன் 7) மாலை டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜூலை 13ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.