நாளை (நவ.04) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு..!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரை தமிழகம் முழுவதும் அதிக அளவு மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வானிலை ஆய்வாளர்கள் நடப்பாண்டு வழக்கத்தை விட வெப்பநிலை கோடை காலத்தில் அதிகரித்தது போல், மழைக்காலத்திலும் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று கணித்துள்ளனர். இன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பொழிய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 4 ஆம் தேதியான நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read Previous

குடும்ப மானத்தை வாங்காதீங்க – பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்ஸன், ஐசு குறித்து பேசிய வனிதா விஜயகுமார்..!!

Read Next

உங்கள் வீட்டில் பணம் அதிகம் சேர இந்த ஒரு பரிகாரம் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular