மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்கவிருக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி 5: 30 மணி வரை நடக்கவிருக்கும் இத்தேர்வு 13 மொழிகளில் எழுதப்பட உள்ளது. இந்த தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வு விதிமுறைகளை ஹால் டிக்கெட்டில் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளனர். மாணவர்கள் 11:30 மணி முதல் இருந்து தேர்வு எழுத வரலாம் என்றும் 1:30 மணிக்குள் வந்து இருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மேல் வரும் மாணவர்கள் எவருக்கும் அனுமதி கிடையாது. அது மட்டும் இல்லாமல் பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கடிகாரங்கள் அணிந்து வரக்கூடாது ஜீன்ஸ் பேண்ட் போட்டு வரக்கூடாது ஃபுல் ஹேண்ட் சட்டை போட்டு வரக்கூடாது அருணா கயிறு கட்டி வரக்கூடாது தோடு போட்டு வரக்கூடாது என பல விதிமுறைகள் இந்த தேர்வு எழுத இருக்கின்றது. மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட், வாட்டர் பாட்டில், ஆதார் கார்டு, போட்டோ ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.




