• September 29, 2023

நாளை வானில் ஒளிரப் போகும் சூப்பர் ப்ளூ மூன்..!! வெறும் கண்களாலே பார்க்கலாம்…மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

விண்ணில் மிகவும் அரிதான நிகழ்வு ஒன்று நாளை நிகழப் போகின்றது. அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு தோன்ற போகிறது. இதனை நாம் வெறும் கண்களாலே பார்க்க முடியும்.

வழக்கமாக தோன்றக்கூடிய பௌர்ணமியை விடவும் நாளை நிலவு அதிக வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது பௌர்ணமியாக இது அமைகின்றது. இந்த மாத தொடக்கத்தில் நிலவு பௌர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நீல நிலவான நாளை இன்னும் பூமிக்கு அருகில் வந்து 3,57,244 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.

நிலவின் சுற்றுவட்ட பாதை மிகக் குறைவாக இருந்து அதே நேரம் பௌர்ணமியாக நிலவு காட்சி அளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கிறோம். நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்திலும் நாளை சூப்பர் மூன் நாளன்று 3,57,244 கிலோமீட்டர் தூரத்திலும் பூமியை வலம் வரும்.

இது போன்ற நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிந்தது. அதை அடுத்து நாளை நிகழவுள்ளது. இதன் பின்னர் 2024 ஆகஸ்டு சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே வானில் தோன்றயுள்ள இந்த அரிய காட்சியை யாரும் பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீங்க என நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறியுள்ளன.

Read Previous

பா.ஜனதா ஆட்சிக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்..!! பிருந்தா காரத் திட்டவட்டம்..!!

Read Next

இந்தோனேசிய கடலில் திடீர் நிலநடுக்கம்..!! சுனாமி ஏற்படுமா? பொதுமக்கள் அச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular