
- நாவல் பழக் கொட்டைகளை சூடான நீருடன் சேர்த்து குடித்து வர என்னாகும் தெரியுமா..!
பொதுவாக நம் நாட்டில் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .இதற்கு மனஅழுத்தம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் பரம்பரையும் ஒரு காரணம் .இதற்கு நார்ச்சத்து நிறைந்த கீரைகள் பச்சை நிற காய்கறிகள் நாவல்பழம் கொய்யா ஆகியவற்றை சாப்பிட்டால் கட்டுக்குள் இருக்கும். மேலும் சுகர் அளவு உயராமல் இருக்க சில இயற்கை வழிகளை கூறி உள்ளோம்.
1. பாகற்காயில் சுகருக்கு நல்ல பலன் உண்டு.அதனால் தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர சர்க்கரைநோய் கட்டுப்படும்.
2.மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.இது டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
3.. இலவங்கப்பட்டை சுகருக்கு நல்ல மருந்து.டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டு வரலாம். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.
4.நட்ஸ் வகைகள் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இவற்றை எடுத்து கொள்வது சுகருக்கு பலன் கொடுக்கும்.
5. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6.கிரீன் டீ ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
7.பீன்ஸ் வகைகல் செரிமானத்தை சீராக்கி ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
8.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தைய பொடியை தண்ணீர்அல்லது மோரில் கலந்து குடித்தால் நல்லது
9.நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.