நாவல் பழங்கள் சாப்பிட்ட மாணவர் பள்ளியில் உயிரிழப்பு..!! போலீசார் விசாரணை..!!
தூத்துக்குடி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாணவர் சிவஞானபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி இடைவேளையில் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு பின்னர் தண்ணீர் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாவல் பழம் சாப்பிட்டதால் மாணவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்ர.