நாவல் பழத்தைக் காட்டிலும் நாவல் பழத்தின் கொட்டைகள் தான் அதிக சத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்…
நாவல் பழம் சுவையானது மற்றும் நாவல் பழம் சாப்பிடுவதனால் மருத்துவ குணம் நிறைந்ததாக மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர், மேலும் நாவல் பழத்தை விட நாவல் பழத்தின் கொட்டையில் தான் சத்து அதிகமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது, நாவல் பழத்தின் கொட்டையை பதப்படுத்தி பவுடராக்கி அதனை பயன்படுத்தும் பொழுது நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்கும் தன்மை நாவல் பழத்தின் கொட்டைக்கு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது, நாவல் பழத்தின் கொட்டையின் பவுடரை தினந்தோறும் பயன்படுத்தி ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு மேற்கொண்ட பொழுது சர்க்கரை அளவு குறைந்தும் சிறுநீரில் சர்க்கரை அளவு வெளியேறிவதையும் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் இதன் மூலம் நாவல் பழத்தின் கொட்டைகள் மற்றும் பவுடரின் விலை கணிசமான முறையில் அதிகரித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் மேலும் நாவல் பழத்தின் கொட்டைகள் பெரிய மருத்துவ பயன் தருவதாகவும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!




