நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்..
கோவையில் நடைபெற்ற தொழிலதிபர் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியுள்ளார், அப்போது ஜிஎஸ்டி குறித்து நகைச்சுவையாக ஒரு சில விமர்சனங்களை முன் வைத்துள்ளார், அவர் பேசிய பதிவுகள் வீடியோவாக வெளிவந்த நிலையில் நிதி அமைச்சரை சீனிவாசன் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர், இந்த விஷயம் பூதாகரமான நிலையில் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், பாரத ஜனதா கட்சியினர் அன்னபூர்ணா நிர்வாகியை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர், மேலும் அன்னபூர்ணா உரிமையா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவர் மன்னிப்பு கேட்பதற்கு பாரத ஜனதா கட்சி அவரை மிரட்டி வருவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி வருகிறது..!!




