நினைத்த காரியம் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம் செய்து பாருங்கள்..!!

நம் அனைவருக்கும் நாம் நினைக்கும் காரியங்கள்  வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலருக்கு அவர்கள் நினைக்கும் காரியத்தில் உடனடி வெற்றி கிடைக்கும். சிலருக்கு நினைத்த காரியங்கள் நடைபெறுவதில் பல்வேறு தடைகளும் ஏற்படும்.

இவ்வாறு நேற்றகாரியங்கள் நடவேராமலோ அல்லது தடைபட்டு போனாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல ஒரு பயன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்திற்கு வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தாம்பாளத்தில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் மற்றும் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை விட்டு அந்த பச்சை கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும்.

பின் தங்கள் கோரிக்கையை தாங்கள் என்ன காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளிடம் கூறி மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு இந்த தீபத்தை கோரிக்கை நிறைவேறும் வரை ஏற்றி வரவும், இந்த தீபத்தை ஏற்றுவதால் வீட்டில் தெய்வசக்தி அதிகமாகும், உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் இதனால் நினைத்த காரியங்கள் வெற்றி அடைய வழி பிறக்கும்.

Read Previous

குடிக்க பணம்தர மறுப்பு: பெற்றெடுத்த தாயை தீவைத்து, கொளுத்திய மகன்..!! பரிதாபமாக பறிபோன உயிர்.!!

Read Next

உடலில் உள்ள நாள்பட்ட கேஸ் வெளியேற்ற உதவும் அற்புத சூரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular