நிம்மதி பெருமூச்சு விடுங்க மக்களே நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்..!!

தமிழகத்தில் நாலு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் உத்தரவை சென்னை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது..

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறும் அடுத்து இரு தினங்களில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது, குறிப்பாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று நவம்பர் 28 அதிக கனமழையும் சென்னை திருவள்ளூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதேபோல் நவம்பர் 29 30 தேதிகளில் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடைய தொடர் கன மலை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதில் தாமதமான நிலையில் மணிக்கு மூணு கிலோ மீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகர்கிறது இதனால் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் நாகை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்..!!

Read Previous

தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலைத்துறையில் வேலை சம்பளம் ரூபாய் 21,500..!!

Read Next

அதிகாலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular