நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!! பெரும் பயத்தில் மக்கள்..!!

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. கடைசியாக தாய்லாந்து மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளின் நிலநடுக்கம் மிகக் கடுமையாக வந்தது என்று நமக்கு நன்றாகவே தெரியும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளோ ஏராளம். அந்த வகையில் இப்பொழுது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் இருந்தனர். இன்வெர் கார்கில் என்னும் நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் கட்டடங்கள் குலுங்கின.

இதுவரை எவ்வளவு சேதம் ஆகியுள்ளது என்ற தகவல் சரியாக வெளிவரவில்லை. இதனால் மக்கள் மிகவும் பீதி அடைந்து இருக்கின்றனர். காரணம் சமீபகாலமாக இந்தோனேசியா மியான்மர் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அடுத்து எந்த நாடு என்று தெரியாமல் கதி கலங்கி இருக்கின்றனர்.

Read Previous

இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..!! உங்களின் சிறுநீரக பிரச்சனை முழுமையாக தீர்ந்துவிடும்..!!

Read Next

ஜம்மு அண்ட் காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி..!! முழுப் போரில் இறங்குமா இந்தியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular