
சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்த நிலையில் அவரை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், சிவராம் தீட்சிதர் தலைமையில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி மஞ்சன திருவிழாவில் பக்தர்கள் யாரும் கனக சபை மீதேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் கூறி வரும் நிலையில் இந்த சந்திப்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.