நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்.! கடுப்பாகி மாப்பிள்ளை செய்த படுபயங்கர கொடூரம்.!! பேரதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி, இவரது மகள் மீனா (வயது 16) இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றியுள்ளார்.

இந்நிலையில் மீனாவிற்கு பிரகாஷ் என்ற 32 வயதுடைய நபருடன் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற ஏற்பாடுகளும் செய்யப்பட்டது ,இந்த நிலையில் சிறுமிக்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை எனவே அவர் மைனராக இருப்பதால் திருமணம் செய்யக்கூடாது என்று குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அறிவுறுத்தி உள்ளனர். அதனை ஏற்றுக் கொண்ட சிறுமையின் பெற்றோர்கள் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை பிரகாஷ் சிறுமியின் பெற்றோரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு அறிவாளால் சிறுமையின் தலையை துண்டாக வெட்டிவிட்டு தலையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமையை கொலை செய்து தப்பி ஓடிய பிரகாசை தீவிரமாய் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

Read Previous

மேகியுடன் அரிசி சாதம் சாப்பிட்டதால் சோகம்..!! உணவு விஷமாக மாறி சிறுவன் பலி..!!

Read Next

திருமண விருந்தில் விஷம்.? 100+ உறவினர்களுக்கு வாந்தி, பேதி..!! அதிர்ச்சி சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular