நிலக்கடலை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..??

சிலர் நிலக்கடலை சாப்பிட்டால் ஜீரணமே ஆவதில்லை என்று புலம்புவார்கள். காரணம், நிலக்கடலையில் லெக்டின் எனும் சத்து அதிகம் இருப்பதால் இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது.

மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரிமானம் அடையாமல் அடைத்துக் கொண்டு விடும்.

இதனால் எலும்புகளில் வீக்கம், தேய்மானம் போன்றவை ஏற்படும்.

மேலும், நிலக்கடலையில் சோடியம் குறைவாகத்தான் இருக்கிறது. 28 கிராம் நிலக்கடலையில் 1500 மில்லி கிராம் சோடியம் இருக்கும்.

மதிப்புக் கூட்டப்பட்ட உப்புக்கடலை அல்லது எண்ணெயில் வறுத்த கடலை என்றால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிடும்போது சோடியம் அளவு கூடும். அப்படி கூடினால் அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதனால் மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஒருசிலர் எப்போதும் வறுத்த கடலையை வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொறித்துக்கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு பொருளும் அளவுக்கு மீறினால் நஞ்சுதானே?

இதயம் காக்கும் நன்மை தரும் நிலக்கடலையை சரியான அளவில் உபயோகித்து தீமைகளில் இருந்து உடலைக் காப்போம்.

Read Previous

காலையில் கொய்யா இலை.. நைட் கருஞ்சீரகம்: தொப்பை இருக்கும் இடமே தெரியாம போயிரும்..!! டாக்டர் சொல்லும் டிப்ஸ்..!!

Read Next

தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிடுங்கள்.. பலவீனமான உடலும் வலிமையாகி விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular