நில மோசடி வழக்கு..!! அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமை தலைமறைவு கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்..!!

கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமுறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியான பத்திரம் பதிவு செய்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நில மோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவினை விசாரணை செய்த கரூர் முதன்மை நீதிமன்றம் சண்முகசுந்தரம் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவினை தள்ளுபடி செய்தனர். அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்ஜாமின் தள்ளுபடி செய்த  நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read Previous

ராஜஸ்தான் துணை முதல்வருக்கு விருது வழங்கிய ஜெர்மானிய சுற்றுலாத்துறை..!!

Read Next

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular