நீங்களும் ஒரு குடும்பத்தை சுமப்பவராக இருந்தால் மட்டும் மேலும் படியுங்கள்..!!

நீங்களும் ஒரு குடும்பத்தை சுமப்பவராக இருந்தால் மட்டும் மேலும் படியுங்கள்!

 

நீங்கள் தினமும் அடுத்தவரைப்பற்றி விமர்சனம் செய்யும் ஒரு அல்ப பிறவிஎனில் மேலும் படிக்காதீர்கள் ! சென்றுவிடுங்கள் உங்கள் அழிவு பாதையை நோக்கி …..

 

ஒரு ஆண்மகன் என்பவன் , தன் குடும்பத்தின் சுமைகளை, தன் தலைமீது வைத்து சுமக்கிறான் , அவன் தலையில் யாராவது பாரம் ஏற்ற வில்லை தானாகவே பாரம் ஏற்றுகிறான் !

 

கேட்காமல் மண்ணில் வந்தவன் , வளரும் போது கேட்டு பெறுகிறான் எல்லாவற்றையும் ,, ஆம் மனைவி , மக்கள் , அவர்களுக்கு வாழ்வாதாரம் , என தன்னை வருத்தி .. கடைசிவரை அவர்களை சுமக்கிறான் !

 

முடியவில்லை என்றாலும் , ஒரு நல்ல ஆண்மகன் , அதை யாரிடமும் இறக்கி வைப்பதில்லை ,. உயிர் உள்ளவரை அதை சுமந்தே ஆக வேண்டும் என , ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறான் !

 

“கேட்காமல் வந்தவன் , கடைசியில் கேட்காமலே உயிரும் பறிக்கப்படுகிறான் ! ”

 

கீழ் உள்ள படத்தை பாருங்கள் ! நம்மில் எத்துனை பேர் இந்த வாழ்க்கையை வாழ்கிறோம் என்று!

 

வலி என்பது எல்லோருக்கும் , வலியையே சொல்லாமல் , அதிலிருந்து விலக வாய்ப்பை தேடுங்கள் !

 

உங்கள் அன்பானவர்களின் மரணத்தை தவிர, இங்கு நீங்கள் இதுவரை எதையும் இழக்கவில்லை , என நம்புங்கள் முழுமையாக , இந்த மாய வாழ்க்கை உங்களையும் ஒருநாள் விடுவிக்க போகிறது , அன்று நீங்கள் எதையும் எடுத்துசெல்ல முடியாது !

 

இப்படி வெறும் ஆளாய் வந்து , வெறும் ஆளாய் போகப்போகும் உங்களுக்கு ஏன் , கோவம் , வஞ்சனை , சூழ்ச்சி , துரோகம் , சுயநலம் , ஆசை, கௌரவம் , எல்லாம் .. இது எல்லாமும் ஒரு மாயை என்பதை உணருங்கள் ., இது உங்களுக்குள் எப்படி வந்ததோ அது உங்களை பாடாய் படுத்திவிட்டு , உங்களோடே அழிந்தும் போகும் !

Read Previous

இது கதை அல்ல உண்மை நம் வீட்டிலும் பெண்கள் உண்டு..!!

Read Next

கூகுள் பே மூலம் மின்க்கட்டணம் செலுத்துவது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular