தமிழகத்தை சார்ந்த திமுக எம் பி சு வெங்கடேசன் நேற்று பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பொழுது பேசி உள்ளார். அப்பொழுது பேசியவர் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது குறித்து சில சர்ச்சை கூறிய கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.
அது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார் அதில் தெரிவிப்பது“ திமுக எம் பி வெங்கடேசன் தான் மதுரை மேயருக்கு அவர் பதவி ஏற்கும்போது அவர் கையில் செங்கோலை கொடுத்துள்ளார். அப்படியானால் வெங்கடேசன் மதுரை மேயரை அடிமைப்படுத்தி உள்ளாரா..? நீங்கள் செங்கோலை கொடுத்தால் அதை புரட்சி என்று கூறுகிறீர்கள். ஆனால் எங்கள் பிரதமர் அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்திருந்தால் மட்டும் அது அடிமைத்தனம், பழமை வாதம் என்று ஆகிவிடுமா..?
ஒரு பக்கம் ஹிந்தி வேண்டாம் என்று திமுக தெரிவித்துக் கொண்டே இன்னொரு பக்கம் உருது பள்ளிகளை திறந்து வைக்கின்றனர்.இந்த லட்சணத்தில் தான் உள்ளது உங்கள் கல்விக் கொள்கை. வெங்கடேசன் திமுக நம்மை கைவிட்டு விடுமோ என்கின்ற அச்சத்தில்தான் கண்டதையும் பாராளுமன்றத்தில் உளறிக்கொண்டு உள்ளார். மேலும் திமுகவில் எப்படி கொத்தளமைகளாக நிறைய பேர் உள்ளார்களோ, அதே போல் காங்கிரஸில் சில கொத்தடிமைகள் இருப்பதை மறக்க முடியாது .இந்துக்கள் பற்றி பேச ராகுல் காந்திக்கு என்ன பாரம்பரிய தகுதி உள்ளது..? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.