தற்பொழுது அனைவரும் காலை எழுந்தவுடன் குடிப்பது டீயாக தான் உள்ளது, அனைவருக்கும் பிடித்தமான பானம் என்றால் அது டீ என்று கூட கூறலாம். ஏனென்றால் உழைக்கும் வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாக இந்த டீ அமைந்துள்ளது.
அப்படிப்பட்ட டீயை குடித்துவிட்டு உடனே பலரும் தண்ணீர் பருகுவார்கள். ஆனால் அது எவ்வளவு மோசமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை குறித்து இப்பதிவில் காண்போம். டீ குடித்த உடனே தண்ணீர் குடித்தால் பற்கள் மஞ்சள் நிறமாய் மாறிவிடும், மேலும் வயிற்றில் அமிலம் சுரக்கும் . வலி மற்றும் செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படும் வயிற்றில் வாயு உருவாகும். வயிறு உப்புசம் ஏற்படும் .மேலும் மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் டீ குடித்தவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் புண் ஏற்படும், வயிற்று பகுதியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும், மேலும் பற்களில் மேலடுக்குகள் பாதிக்கப்படும் எனவும் மேலும் பற்கள் துவாரங்கள் ஏற்பட்டு பற்களின் உணர்ச்சித் திறன் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் ஒரு சிலர் மிகச் சூடான டீ குடித்துவிட்டு உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். அப்படி செய்வதால் சிலருக்கு சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் .மேலும் தொண்டை புண்ணாகி வீக்கம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் யாரும் டீ குடித்தவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதால் இந்த பிரச்சனைகள் இருந்து காத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.