நீங்கள் நைட் ஷிப்ட் வேலை செய்பவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!!

தற்பொழுது உள்ள காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மிக முக்கியமான காரணம் முக்கிய காரணமாக இருப்பது இரவில் தூங்காமல் விழித்திருப்பது தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரவில் தூங்காமல் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இரவு நேர பணியில் ஈடுபடுபவர்களில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேர வேலையை குறைத்துக் கொள்வது மிக நன்று என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக ஒரு மாத காலம் இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இரவு நேர வேலை பார்த்தால் பிரச்சனை ஏற்படாது. இரவு நேர வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மரையான  எண்ணங்கள் வெளிப்பட்டு உடலும் மனதும் சோர்வடைகின்றது. எனவே இரவு நேர வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் அந்த வேலையை தவிர்த்துவிட்டு பகலில் வேலை பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என மருத்துவர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read Previous

இரவில் நெஞ்செரிச்சல் தொல்லையா..? இதையெல்லாம் தவிர்த்திடுங்க..!!

Read Next

வாய்துர்நாற்ற பிரச்சனைக்கு 2 நிமிடத்தில் உடனடி தீர்வு..!! வெறும் ‘டீ’யே போதும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular