
நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டுமா இந்த யுக்திகளை கையாளுங்கள் பணம் உங்கள் பைகளில் புரளும்..
முதலில் உங்கள் மாதாந்திர வருமானம் மற்றும் செலவை பட்டியலிடுங்கள், இதன் மூலம் உங்களது செலவை பட்டியலிட்டு குறைத்துக் கொள்ள முடியும்,பின்னர் உணவு, போக்குவரத்து, மருத்துவம், பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு எவ்வளவு பணத்தை தேவையின்றி செலவு செய்வீர்கள் என்று கணக்கு எழுதுவதன் மூலம் பணத்தை அடுத்த முறை சேமிப்பதற்கு பயன்படுத்தலாம், மேலும் மாத சம்பளத்தில் முதல் செலவே சேமிப்பாக இருக்கும் பட்சத்தில் உங்களது தேவையை குறைத்துக் கொள்ள முடியும், இதன் மூலம் விரைவில் நீங்கள் பணக்காரர்களாக மாற வாய்ப்பு உண்டு..!!