
பாகற்காயில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் காரணமாக நமது உடலில் உள்ள நோய்கள் பறந்து ஓடுகிறது பாகற்காய் சாப்பிடுவது உடலுக்கு பெரிதும் நன்மை தருகிறது..
பாகற்காயில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் காரணமாக உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமூகங்கள் நீரழிவு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரம்பரியமாக பாகற்காயை பயன்படுத்துகின்றனர், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று பாகற்காய் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக உறுதி செய்துள்ளது, உதாரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 24 பெரியவர்கள் உள்ளடக்கிய மூன்று மாத ஆய்வில் தினந்தோறும் பாகற்காயை உட்கொள்வதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது, பாகற்காயில் புற்றுநோய் எதிர்த்து போராடும் தென்கொண்ட குறிப்பிட்ட சேர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டி காட்டி இருக்கிறது உதாரணமாக பாகற்காய் சாறு வயிறு பெருங்குடல் நுரையீரல் போன்ற உடல் பகுதிகளில் உள்ள புற்றுநோய் செல்களை அகற்றுவதில் செயல்திறனை வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வக ஆய்வு நிரூபித்துள்ளது, அதிகளவு கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளில் கொழுப்பு தகடுகளை உருவாக்கலாம் நமது இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக மாறுவதால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும் சமீபத்திய ஆய்வு பாகற்காய் சாறு கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் வாரத்தில் இரண்டு முறை பாகற்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கிருமிகள் வெளியேறுகின்றது..!!