நீங்கள் பிளாக் டீ குடிப்பவரா?.. அதனால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?..

உணவு உட்கொண்ட பிறகு பிளாக் டீ எனப்படும் கருப்புத் தேனீரை நிறைய பேர் பருகுகிறார்கள். சாப்பிட்ட பிறகு பிளாக் டீ பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை உட்கொண்டதன் மூலம் அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாக் டீ, கிரீன் டீ போன்ற தேயிலைகளில் பாலிபினால்கள் உள்ளன.  இவை இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கல் படிவதை தடுப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, எலும்புகளை வலிமைப்படுத்துவது, நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, உடல் எடையை குறைப்பது, செரிமானம் சீராக நடைபெற ஊக்குவிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை பிளாக் டீ வருவதன் மூலம் பெறலாம்.

Read Previous

படித்ததில் பிடித்தது: எப்போது நம்முடைய குறைகளும் நிறையாகும் தெரியுமா?..

Read Next

சென்னையில் தொடரும் கனமழை..!! 4 ரயில்கள் ரத்து..!! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular