இன்றைய சமுதாயத்தில் மக்களுக்குள் மன அழுத்தங்கள் பெருகிவிட்டது அப்படி இருக்கையில் மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்.
மனித வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி என எல்லாம் கலந்த கலவையே இந்த வாழ்க்கை அப்படி இருக்கையில் கண்ணீரும் கவலையும் வருவது இயல்புதான் அது சில நாட்கள் சில மாதங்கள் இருந்து கடந்து சென்றுவிடும், சில நேரங்களில் நமக்கு பிடிக்காத விஷயமும் அல்லது பிடிக்காத மனிதரையோ காணும் போது எரிச்சல், கோபம்,வெறுப்பு என எல்லாவற்றையும் சகிப்புத்தன்மையோடு கடந்து செல்வதும் மன அழுத்தத்திலிருந்து நம்மை காப்பாற்றும், சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது அவை எல்லாம் சில காலம் மட்டுமே இங்கு தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை முடிந்தவரை மன அழுத்திருந்து வெளிவர பாடல் கேட்பது பிடித்த இடத்திற்கு சென்று வருவது நம்மை சிரிக்க வைக்க கூடிய மனிதர்களோடு பழகுவது புத்தகம் படிப்பது சமைப்பது இவை எல்லாம் நம் மனதை ஆசிவாசப்படுத்தி மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும்..!!