நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டுமா அஜித் சொல்லும் ரகசியம் இதுதான்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவது இவரது வழக்கம். பிடித்தமான வேலைகளை செய்யும் போது தான் நமக்கான வாழ்வு பூர்த்தியடையும் அவ்வகையில் ஒவ்வொருவரும் நாம் யார் என்பதை உணர வேண்டியது அவசியமாகும். இதனை அறிந்து கொள்ள அஜித் சொல்லியிருக்கும் மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறது இந்த பதிவு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் எந்தவித சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளும் பங்கேற்க மாட்டார். ஒரு நிகழ்ச்சிக்காவது அஜித் வர மாட்டாரா என இயங்கும் ரசிகர்கள் ஒரு புறம் அஜித்தை தொடர்ந்து அழைக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுபுறம் இருப்பினும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அஜித் நிராகரித்து வருகிறார். நடிப்பு தவிர்த்து கார் ரேஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அஜித் அதற்கு இருப்ப பலமுறை கார் ரேஸிலும் கலந்து கொண்டுள்ளார்..

அஜித் தனிமையான பயணங்களையும் விரும்பக் கூடியவர் நாம் யார் என்று உணர பயணம் ஒன்றே சிறந்த வழி என என்னிடம் அஜித் கூறியதாக நடிகர் சமுத்திரக்கனி அண்மையில் தெரிவித்து இருந்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் துணிவு படத்தில் அஜித் சாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் யார் என்று தெரியாத ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள் அப்போது நீங்கள் யார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் எனக் கூறினார். அப்படி ஒரு முறை அஜித் பயணம் மேற்கொண்ட போது அஜித் சாருக்கு பசி எடுத்தது அப்போது அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம் நடிகர் அஜித் சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று கேட்டார் அதற்கு அந்த ஆடு மேய்ப்பவர் ஒரு ரொட்டியில் முட்டையை வைத்து அஜித் சாருக்கு சாப்பிட கொடுத்தார் அதற்கு அஜித் சார் பணம் கொடுத்தும் ஆடு மேய்ப்பவர்கள் வாங்க மறுத்துவிட்டனர் மொழி தெரியாத ஊரில் உணர்வுகளால் மட்டுமே நிறைந்த பயணம் அது. நீங்களும் எங்கேயும் பயணம் மேற்கொள்ளுங்கள் இந்த உலகம் எப்படியானது நீங்கள் யார் இந்த உலகத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என அனைத்துமே உங்களுக்கு புரியும் என அஜித் சொன்னதை சமுத்திரக்கனி தெரிவித்தார்..

ஒவ்வொருவரது வாழ்விலும் பயணங்கள் இன்றியமையாதவை வாழ்க்கையில் புரிந்து கொள்ளவும் வாழ்க்கையை வாழ்வதற்கும் பயணங்கள் துணை நிற்கின்றன ஆகையால் வருடத்திற்கு ஒருமுறை எனும் பயணம் மேற்கொள்ளுங்கள் இந்த பயணம் உங்களை உங்களுக்கே அடையாளப்படுத்த உதவும் நடிகர் அஜித்தின் இந்த ரகசியத்தை பின்பற்றினால் நிச்சயம் பயணம் நம் வாழ்வில் சுகமான நினைவுகளை தரும் என்பதில் ஐயமில்லை..!!

Read Previous

நம் குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

பிளேடுகளின் நடுப்பகுதி ஏன் ஒரே மாதிரியான வடிவமைப்பை பெற்றுள்ளது என்று தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular